'தல' என சொன்னதும் மாணவர்களிடம் கோபப்பட்ட நடிகர் விஜய் சேதுபதி
Vijay Sethupathi Latest News- நடிகர் விஜய் சேதுபதி, தல என சொன்னதும் கத்திய மாணவர்கள் மீது கோபப்பட்டு பேசியுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
Vijay Sethupathi Latest News- நடிகர் விஜய் சேதுபதி, தல என சொன்னதும் கத்திய மாணவர்கள் மீது கோபப்பட்டு பேசியுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் பன்முகத்தன்மை கொண்டவர் விஜய் சேதுபதி. இவர் கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்தார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பிறந்த விஜய் சேதுபதி, தன் படிப்பை அதே மாவட்டத்திலும், சென்னையிலும் மேற்கொண்டார். பள்ளியில் தான் சராசரிக்கும் கீழ் மாணவன் என்றும் விளையாட்டிலும் பாடத்திட்டம் சாரா நிகழ்வுகளிலும் தனக்கு நாட்டம் இருந்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இளநிலை வணிகவியலில் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் துபாயில் கணக்காளராக பணி புரிந்தார். அவ்வேலை பிடிக்காததால் கடந்த 2003ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார்.
புகைப்படக்காரர் ஒருவர் இவரின் முகம் படங்களில் அழகாக தெரியக்கூடிய ஒன்று எனக் கூறியதால் இவர் நடிப்புத்துறையை தேர்ந்தெடுத்துள்ளார்.
பின்னர் பெண் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரௌடி தான், சேதுபதி, 96 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் நடிகர் விஜய் சேதுபதி ஆவார். இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி சென்னை லயோலா கல்லூரியில் மேடையில் பேசும்போது தலை என சொன்னதும் மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். அதற்கு கோபமாக விஜய் சேதுபதி மாணவர்களிடம் பேசி இருக்கிறார்.
சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் நிகழ்சி ஒன்றிற்கு சிறப்பு அழைப்பாளராக விஜய் சேதுபதி சென்றுள்ளார். அங்கு அவர் மாணவர்களுக்காக உரை நிகழ்த்தினார். அப்போது, திருக்குறள் ஒன்றை கூறி அவர் விளக்கம் அளித்தபோது மாணவர்கள் தல என கூச்சலிட்டனர். இதனை கண்ட விஜய் சேதுபதி, ''ஏம்பா நாம என்ன முக்கியமானதை பேசிகிட்டு இருக்கோம். அட போங்கப்பா'' என மைக்கில் பேசியுள்ளார்.
actor vijay sethupathi
அதாவது,
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
என விஜய் சேதுபதி கூறியதும், நிகழ்ச்சியில் இருந்த மாணவர்கள், திருக்குறளில் வரும் 'தலை' வார்தை வந்ததும் 'தல' என ஆரவாரம் செய்தனர். பேசிக்கொண்டிருந்தபோதே மாணவர்கள் கூச்சலிட்டதும், விஜய் சேதுபதி கடுப்பாகியுள்ளார். பின்னர், சமாதானத்துடன் தொடர்ந்து பேச ஆரம்பித்துள்ளார். நிகழ்ச்சியில் மாணவர்கள் மீது கோபப்பட்டு பேசிய அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு கமெண்ட் வந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2