மாறுவேடத்தில் தளபதி விஜய்... கட்சியை வளர்க்க புதிய திட்டம்..!
மாறுவேடத்தில் தளபதி விஜய்... கட்சியை வளர்க்க புதிய திட்டம்..!;
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது அரசியல் களத்தில் தனது அடியெடுத்து வைத்திருப்பது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "தமிழக வெற்றி கழகம்" என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ள அவர், மக்களின் ஆதரவை திரட்டும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தமிழக வெற்றி கழகம் எனும் பெயரில் கட்சியைப் பதிவு செய்துள்ள விஜய், முதலில் இந்த கட்சிக்கு தமிழக மக்கள் கழகம் என்றும் பெயர் வைக்க திட்டமிட்டிருந்தாராம். இதனை ஆங்கிலத்தில் பார்க்கும்போது TMK என்று வரும். இது DMK என்று குறிப்பிடப்படும் திமுகவுக்கு சாதகமாக அமைந்துவிடக்கூடிய வாய்ப்பு அதிகம்.
இதனாலேயே தனது கட்சியை தமிழக வெற்றிக் கழகம் என்று பதிவு செய்துள்ளார். ஆரம்பம் முதலே பார்த்து பார்த்து கட்சியை மேம்படுத்தும் திட்டங்களை வகுத்து வருகிறார் விஜய். இவருக்கு உதவி செய்ய புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இளைஞர் படை ஒன்றும் பின்னாடி இருந்து வேலை செய்து வருகிறது என்கிறார்கள்.
மக்களின் கருத்தை கேட்டு அறிதல்
தனது கட்சி ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து மக்களிடம் நேரடியாக கருத்து கேட்டு அறிவதில் விஜய் தீவிரம் காட்டுகிறார். திரையுலகைச் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருடன் தொலைபேசியில் பேசி வருவதோடு, பொதுமக்களின் கருத்தை நேரடியாக அறியும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். ஏற்கனவே வேறு கட்சியில் இருப்பவர்களுடனும் நட்பில் இருக்கும் விஜய், அரசியல் கட்சியின் அடிப்படை குறித்து துவங்கி பல்வேறு விசயங்களை அவர்களுடனும் கலந்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாறுவேடத்தில்
தற்போது, "கோட்" படப்பிடிப்புக்காக புதுச்சேரியில் தங்கியிருக்கும் விஜய், வார இறுதி நாட்களில் சென்னைக்கு வந்து தனது பனையூர் வீட்டில் தங்குகிறார். புதுச்சேரியில் மக்கள் கூடும் பல்வேறு இடங்களுக்கு சாதாரணமாக எளிய உடையில் சென்று, தமிழக வெற்றி கழகம் பற்றிய மக்களின் கருத்துக்களை கேட்டு வருகிறார். தமிழகம் முழுக்க எல்லாத் தொகுதிகளிலும் நேரடியாக சென்று தன்னுடைய கட்சி குறித்த கருத்துக்களை கேட்க இருக்கிறாராம் விஜய், மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு இந்த பயணத்தை அவர் துவங்க இருக்கிறார்.
ராகுல்காந்தி பாணியில் ஆனால், தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் விஜய் சென்று பேசவுள்ளதாகவும், இடையிடையில் தமிழகத்தின் நான்கு முக்கிய இடங்களில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் போட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மொபைல் போனில் ரகசிய ஆடியோ பதிவு
தனது சட்டை பாக்கெட்டில் மொபைல் போனை வைத்துக்கொண்டு, மக்களின் கருத்துக்களை ரகசியமாக ஆடியோ பதிவும் செய்து வருகிறார் விஜய். இதன் மூலம், மக்களின் மனநிலையை துல்லியமாக புரிந்துகொண்டு, அதற்கேற்ப தனது அரசியல் பயணத்தை வடிவமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்சி பணிகளை தீவிரப்படுத்துதல்
தமிழக வெற்றி கழகத்தை வலுப்படுத்தும் பணிகளை விஜய் தீவிரப்படுத்தியுள்ளார். கட்சி அமைப்பு, கொள்கை வகுப்பு, பிரச்சாரம் போன்றவை தொடர்பான ஆலோசனைகளை தனது நெருங்கிய ஆலோசகர்களுடன் நடத்தி வருகிறார்.
மக்களின் எதிர்பார்ப்பு என்ன?
விஜய்யின் அரசியல் பிரவேசம் தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் ஒழிப்பு, சமூக நீதி, பொருளாதார மேம்பாடு போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார் என அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் நம்புகின்றனர்.
விஜய்யின் அரசியல் பயணம் எந்த திசையில் செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.