நடிகர் விஜயின் சொகுசு கார் இறக்குமதி வழக்கில் இன்று தீர்ப்பு

சொகுசு கார் விவகாரத்தில் அபராதத்தை ரத்து செய்யக்கோரிய நடிகர் விஜய் மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது;

Update: 2022-07-15 03:42 GMT

கடந்த 2005ஆம் ஆண்டு நடிகர் விஜய் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார் ரூபாய் 63 லட்சம் மதிப்புடையது. இந்த காருக்கு நுழைவு வரி செலுத்த வணிகவரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .அந்த வழக்கில் நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. விஜய் தரப்பில் ரூபாய் 7,98,75 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது.

அத்துடன் வரி செலுத்தப்படாத இடப்பட்ட காலத்திற்கான அபராதமாக 30,23,650 ரூபாய் செலுத்த வேண்டும் என கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வணிகவரித்துறை விஜய்க்கு மீண்டும் உத்தரவிட்டது.

வரி செலுத்த தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது . கார் இறக்குமதி செய்யப்பட்டதிலிருந்து மாதத்திற்கு இரண்டு சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும் . ஆனால் தமக்கு 400 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று விஜய் தரப்பில் கூறப்பட்டது.


நுழைவு வரியை செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு குறித்த காலத்திற்குள் நுழைவு வரி செலுத்தாததால் 2005 ஆம் டிசம்பர் முதல் 2021 செப்டம்பர் வரையிலான 189 மாதங்களுக்கு நுழைவு வரியில் இரண்டு சதவீதம் அபராதம் வட்டியாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 650 ரூபாய் செலுத்தும் படி உத்தரவிட்டதாகவும் வணிகவரித்துறை தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.

அத்துடன் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தது . நடிகர் விஜய் மற்றும் வணிகவரித்துறையின் மனுக்களையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கிறது.

Tags:    

Similar News