அரசியலில் குதிக்கும் விஜய்..? 2026 தேர்தலுக்கு அதிரடி வியூகம்!

நடிகர் விஜய் அரசியலில் குதிக்க தயாராகி வருவதாகவும் வரும் 2026ம் ஆண்டு அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடு மற்றும் இயக்கம் குறித்து ஆலோசனை நடத்த நிர்வாகிகளை அழைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2023-04-10 10:44 GMT

நடிகர் விஜய் அரசியலில் குதிக்க தயாராகி வருவதாகவும் வரும் 2026ம் ஆண்டு அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடு மற்றும் இயக்கம் குறித்து ஆலோசனை நடத்த நிர்வாகிகளை அழைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரத்தில்தான் நடிகர் விஜய் தனது இன்ஸ்டாகிராம் கணக்கைத் துவங்கினார். துவங்கிய சில மணி நேரங்களில் மில்லியன் கணக்கில் அவரை பின்பற்றுபவர்கள் குவிந்தனர். இதனால் இந்தியா முழுக்க விஜய் இன்ஸ்டாகிராமில் நுழைந்தது குறித்த பேச்சு இருந்தது. இந்நிலையில், இவ்வளவு நாள் இல்லாமல் திடீரென்று இன்ஸ்டாகிராமில் நுழைந்ததற்கு என்ன காரணம் என பலரும் பலவாறு பேசி வந்தனர்.


டிவிட்டரில் மட்டுமே இருந்த விஜய் இன்ஸ்டாகிராமில் நுழைந்ததற்கான காரணம் குறித்து பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சினிமா செய்தியாளரான அந்தணன் இதை விஜய்யின் அரசியல் முன்னெடுப்பு என்று கூறுகிறார்.

கமல்ஹாசன், ரஜினிகாந்துக்கு பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் என்றால் அது விஜய்யும் அஜித்தும்தான். இருவருக்குமே லட்சக் கணக்கிலான ரசிகர் படை இருக்கிறது. இன்ஸ்டாவில் விஜய் வந்தது திடீரென்று நிகழ்ந்ததாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


சர்ப்ரைஸாக இருந்தாலும் இது விஜய்யின் அரசியல் நடவடிக்கையின் ஆரம்பகட்ட செயல்பாடு என்கிறார் அந்தணன். வரும் 2024ல் இல்லை என்றாலும் 2026ம் ஆண்டு அவர் அரசியல் கட்சி துவங்க சிந்தித்து வருகிறார் என்கிறார்கள்.

விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்றால் இப்போது இருக்கும் தொழில்நுட்பம், வரப்போகும் தொழில்நுட்பம் என எதையும் விட்டுவிடக்கூடாது. பேஸ்புக், டிவிட்டர் மட்டும் போதாது இப்போதைய டிரெண்ட் இன்ஸ்டாகிராம் அதையும் புடிக்க வேண்டும் என அவரது மேனேஜர் ஜெகதீஸ்தான் விஜய்க்கு எடுத்து சொல்லியிருக்கிறார். அவரது சமூக வலைத்தள கணக்குகளை ஜெகதீஸ்தான் கவனித்து வருகிறார்.


இளைஞர்களை முக்கியமாக முதல் தலைமுறை வாக்காளர்களை கவர விஜய் பல்வேறு திட்டங்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதனுடன் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறாராம். வெளிப்படையாக பேசாவிட்டாலும் இது அரசியலை நோக்கி செல்லும் பயணம் என்பதை அறிந்தே பலரும் பணி செய்து வருகிறார்கள்.

தனது மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் கண்காணித்து அதனை நல்வழிப்படுத்த உத்தரவிட்டுள்ளாராம் விஜய். நேரடியாக எந்த அரசியல் கட்சிகளுடனும் மோதாமல் தங்களின் சக்திக்கு உட்பட்டு மக்களுக்கு உதவும்படியும் தனது ரசிகர்களுக்கு வாய் மொழியாக உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


2024 தேர்தலுக்கு முன் விஜய் தனது ரசிகர்களை சந்திப்பார் எனவும் அதில் முக்கியமான சில விசயங்களைப் பேச வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

Tags:    

Similar News