நடிகர் விஜய், அஜித் கலந்துகொள்ளாத நயன்தாரா திருமணம்… காரணம்..?

Today Tamil Cinema News in Tamil - நடிகர்கள் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் நயன்தாராவின் திருமணத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதற்கான காரணம் ரிலீஸ்.

Update: 2022-06-24 01:35 GMT

Today Tamil Cinema News in Tamil - ஏழாண்டுகளுக்கும் அதிகமான தங்கள் காதலின் அடுத்த கட்டமாக திருமணத்தில் இணைந்தனர் நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும். இவர்களது திருமணம் அண்மையில், மாமல்லபுரத்தில் கடந்த 09/06/2022 அன்று மிக பிரமாண்டமாக நடந்தது. ஆனால், அந்த பிரமாண்டம் வெறும் வார்த்தைகளில் மட்டுமே வெளியில் பகிரப்பட்டது. புகைப்படங்களாகவோ, வீடியோக்களாகவோ பகிரப்படவில்லை. காரணம், திருமணத்தில் கலந்துகொண்ட யாரும் புகைப்படங்களோ, வீடியோவோ எடுக்கவில்லை. எடுக்க அனுமதிக்கவில்லை. இதுபோன்று பல்வேறு கட்டுப்பாடுகளே பல முக்கிய வி.ஐ.பி-க்களையும் பிரபல நடிகர்களையும் திருமணத்தில் பங்கேற்க விரும்பாமல் செய்துவிட்டது.

சுமார் 200 பேருக்குதான் அழைப்பிதழே அளித்தார்கள் நயனும் விக்கியும். திருமண ஏற்பாடுகள் நடைபெறத் தொடங்கியதுமே பிரபல தனியார் ஓடிடி தளம் ஒன்று நயன் - விக்கியிடம் பேசி திருமண நிகழ்வை பதிவு செய்து டெலிகாஸ்ட் செய்ய சுமார் 25 கோடி ரூபாய் விலைபேசி ஒப்பந்தம் செய்து பெற்றுக்கொண்டதாம். திருமண நிகழ்வு அவர்கள் வசமானதால், அவர்கள் போட்ட கட்டுப்பாடுகள்தான் அத்தனையும் என்கிறார்கள்.

திருமணத்தில் கலந்துகொள்வோர் அரங்குக்கு வெளியிலேயே தங்களது செல்போன்களை ஒப்படைத்துவிட்டு, திருமண நிகழ்ச்சி முடிந்து வெளியேறும்போது பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல், குறிப்பிட்ட தூரத்துக்கு முன்பாகவே, தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, அங்கிருந்து அரங்குக்கு வர ஏற்பாடு செய்யப்பட்ட பேட்டரி கார்களில் ஏறி அரங்குக்கு வரவேண்டும். மேலும், அனைவரையும் பரிசோதித்து அனுமதிக்கவும் பாதுகாப்புக்கும் ஏராளமான பவுன்ஸர்கள் குவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில்தான், நடிகர்கள் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் திருமண விழாவில் பங்கேற்கவில்லை. தாங்கள் பங்கேற்பதை படம் பிடித்து யாரோ ஓர் ஓடிடி தளம் பணம் பண்ணிக்கொள்வதை அவர்கள் விரும்பவில்லை. அதேநேரம், தங்கள் ரசிகர்களுக்கு இது பெருத்த ஏமாற்றத்தையும் சங்கடத்தையும் எற்படுத்தும் என்பதால் திருமணத்தை புறக்கணித்தாக சொல்கிறார்கள். இது, சம்பளம் வாங்காமல் ஒரு பிரமாண்ட படத்தில் நடித்துக்கொடுப்பதற்கு சமம் என்கிறார்கள் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள். இதனால்தான், பல முன்னணி நடிகர்கள் அதிருப்தியில் நயன்தாராவின் திருமணத்துக்கு ட்விட்டரில்கூட வாழ்த்துக்கூறவில்லையாம்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News