நடிகர் விஜய்யின் பீஸ்ட் பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்பட ட்ரைலர் ஏப்ரல் 2-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும்-ரசிகர்கள் உற்சாகம்;

Update: 2022-03-31 01:40 GMT

பீஸ்ட் படத்தின் டீசர் அல்லது ட்ரைலரை எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள். தற்போது இதற்கான பதில் கிடைத்துள்ளது. பீஸ்ட் படத்தின் ட்ரைலர் ஏப்ரல் 2-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் 65-வது படமான 'பீஸ்ட்' திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் 'சர்கார்' படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.



 


Similar News