நடிகர் வடிவேலு உடல்நிலை எப்படி உள்ளது? மருத்துவமனை அறிக்கை
கொரோனா தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலுவின் உடல் நிலை சீராக உள்ளதாக, மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படப்பிற்காக லண்டன் சென்றிருந்தார். படப்பிடிப்பு முடித்துக் கொண்டு கடந்த 23ஆம் தேதி, சென்னைக்கு திரும்பினார். இதனிடையே, அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பது, பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் வடிவேலு அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சையில் உள்ளார்.
இதனிடையே, நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளதாக, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. நல்ல முன்னேற்றம் உள்ளதால், நடிகர் வடிவேலு விரைவில் சிகிச்சை நிறைவு செய்து வீடு திரும்புவார் எனவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.