பழம்பெரும் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த், உடல் நலக்குறைவால் காலமானார்.  அவருக்கு வயது, 84.;

Update: 2021-10-12 15:30 GMT

ஈரோட்டை சேர்ந்த நடிகர் ஸ்ரீகாந்த், 1965ம் ஆண்டில், இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிறை ஆடை படத்தின் மூலம், தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.

இவரின் இயற்பெயர் வெங்கட்ராமன். எனினும், ஸ்ரீகாந்த் என்ற பெயரில் அறிமுகமாகி, தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட 200 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்; இவற்றில் 50க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அத்துடன், வில்லனாகவும் சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ஸ்ரீகாந்த், இன்று பிற்பகல் காலமானார்.

Tags:    

Similar News