தெலுங்கு கற்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்

Learn Telugu - சிவகார்த்திகேயன் தெலுங்கில் சரளமாகவும் தெளிவாகவும் பேசுவதற்கான நுட்பங்களைக் கற்றுக் கொண்டிருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2022-08-09 02:43 GMT

நடிகர் சிவகார்த்திகேயன்

Learn Telugu - இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பிரின்ஸ்' படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் 'பிரின்ஸ்' படத்திற்காக முதல் முறையாக தெலுங்கில் டப்பிங் பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் தெலுங்கில் சரளமாகவும் தெளிவாகவும் பேசுவதற்கான நுட்பங்களை கற்றுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் படத்திற்கான டப்பிங் பணிகள் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News