பல நாட்களாக தொல்லை அனுபவித்துவரும் நகுலின் மனைவி சுருதி போலீசில் புகார்
பல நாட்களாக தொல்லை அனுபவித்து வருகிறேன் என நகுலின் மனைவி பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது;
தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் நடிகர் நகுல். நடிகை தேவயானியின் சகோதரரான இவர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2016ம் ஆண்டு தன்னுடைய பள்ளிக்கால தோழி சுருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பல நாட்களாக தொல்லை அனுபவித்து வருகிறேன் என்று நகுலின் மனைவி பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வைரலாகி பிரபலமான நடிகராக திகழ்பவர் நகுல். இவர் மாசிலாமணி, காதலில் விழுந்தேன், கந்தக்கோட்டை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார்.
இந்த நிலையில் நகுல் மற்றும் சுருதி ஆகிய இருவருமே சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார்கள் என்பதும் பல புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. இதனால் இவரை சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான பேர் ஃபாலோ செய்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் பல சமூக கருத்து குறித்தும் இவர் பதிவிட்டு வருகிறார். இவரின் விடியோவிற்கு இவர் ஆதரவும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்.
மேலும், தான் போடும் வீடியோக்களுக்கு எதிர் மறையாக பேசுபவர்களுக்கு சுருதி நேரடியாக பதில் கொடுத்து வந்திருக்கிறார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் சில விஷ கிருமிகளால் பல நாட்களாக தான் அனுபவித்து வரும் தொல்லைகள் குறித்து நகுல் மனைவி ஸ்ருதி பகிர்ந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நகுலின் மனைவி சுருதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மர்ம நபர்கள் சிலர் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வருவதாக தெரிகிறது.
சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் தவறான குறுஞ்செய்திகளையும், ஆபாச புகைப்படங்களையும் அடையாளமற்ற போலி கணக்குகளிலிருந்து இவருக்கு அடிக்கடி சிலர் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். இதனை சுருதி பலமுறை கண்டித்தும் இதனை அனுப்புபவர்கள் அடங்கிய பாடில்லை. மேலும், அந்த ஆபாச பதிவில் ஐ லவ் யூ எனவும் பதிவிட்டுள்ளனர். இதற்கு ஸ்ருதி கூறியது, எப்படி இந்த மாதிரி யாருக்கும் தெரியாத பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்புகிறீர்கள்? இது எனக்கு முதல் முறை அல்ல பலமுறை ஆபாச வீடியோக்கள் வந்ததாகவும் கூறி இருக்கிறார்.
இதனை சுருதி பலமுறை கண்டித்தும் தொடர்ச்சியாக ஆபாச படங்கள் வந்து கொண்டிருந்ததை அடுத்து சுருதி போலீசில் இதுகுறித்து புகார் செஞ்சிருக்கார்.