நடிகர் சூர்யாவின் 'விருமனி'ல் நாயகன் நடிகர் கார்த்தி..!

நடிகர் சூர்யா தயாரிக்கும் 'விருமன்' படத்தின் நாயகன் கார்த்தி. இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா மதுரையில் நடைபெற உள்ளது.;

Update: 2022-07-29 17:39 GMT

நடிகர் கார்த்தி. நடிகை அதிதிசங்கர்

சூர்யாவின் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடித்துள்ள 'விருமன்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

'கொம்பன்', 'மருது', 'புலிக்குத்தி பாண்டி', 'தேவராட்டம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குநர் முத்தையா. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம்தான் 'விருமன்'. கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். அதிதி சினிமாவில் அறிமுகமாகும் முதல் திரைப்படம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தை மகன் உறவை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ள 'விருமன்' படத்தில் ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ், ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். 'விருமன்' படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற ஆகஸ்ட் 3-ம் தேதி மதுரை நகரில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பட்த்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தேனி மற்றும் மதுரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தநிலையில், இசை வெளியீட்டு விழாவை அங்கு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags:    

Similar News