"என்னை 'மன்மதலீலை'யில் சிக்க வைத்தார் கமல்" - நடிகர் ராதாரவி பேச்சு..!
நடிகர் ராதாரவி, 'கனல்' இசை வெளியீட்டு விழாவில், தன்னை 'மன்மதலீலை'மூலம் கமல் தமிழுக்கு கொண்டு வந்ததை கலகலப்பாகக்கூறினார்.
ஓரிரு நாட்களுக்கு முன்பு 'கனல்' படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ந்தது. நைட்டிங்கேல் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாரிப்பாளர் டி.சமய முரளி இயக்கியுள்ள படம் 'கனல்'. இப்படத்தில், ஸ்ரீதர் மாஸ்டர், காவ்யா பெல்லு, ஸ்வாதி கிருஷ்ணன் ஆகியோருடன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராதாரவி, "நான் முதன்முதலில் கன்னட படத்தில்தான் நடித்தேன். கமல்தான் என்னை 'மன்மத லீலை' படத்தில் சிக்க வைத்தார். ஸ்ரீதர் டான்ஸ்னாலே ரொம்ப நல்லாருக்கும். அதுபோலவே, வேல்முருகன் மாரியாத்தாளுக்கு என்றே இருக்குற ஆள். நல்லா பாடுவார். வேல்முருகன் பாட்டுன்னாலே எனக்கு எப்பவுமே ரொம்பப் பிடிக்கும்.
மெட்ராஸ் கானா பாடல்களை மேடையில் அழகாக பாடிய தம்பிகளுக்கு ஹேட்ஸ் ஆப். நானெல்லாம் ஒரு காலத்தில் கானா கும்பலோடவே சுத்துனவன்தான். இந்த 'கனல்' படத்தில் தென்மா எக்ஸ்லண்டா மியூசிக் பண்ணிருக்கார். கேமராமேன் நல்ல உழைப்பைக் கொடுத்திருக்கார். சமய முரளி இந்தப் படத்தின் கதையைச் சொன்னார். அருமையாக இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களை நாம் குட்ட குட்ட அவர்கள் சிலிர்த்தெழுவார்கள். இயக்குநர் இப்படியொரு கதையை எடுத்ததுக்கு ஹேட்ஸ் ஆப்.
சிலர் "நான் கீழ இருந்து வந்தேன். அதனால் இப்படி படம் எடுத்தேன்" என்பார்கள். ஆனால் சமய முரளி மேலே இருந்து வந்தவர். இப்பலாம் யார், யார்லாமோ நடிக்க வந்துட்டாங்க. நானூறு படம் நடிச்சிட்ட பிறகும் நானே சிலரிடம் "நான் நல்லா நடிப்பேன்"னு சொல்ல வேண்டியிருக்கு. கீழ இருக்கவனை பத்தி படம் எடுக்குற சமய முரளியோட உயர்ந்த மனசுக்கு இந்தப் படம் பெரிதாக ஹிட் ஆகும். படம்னாலே அதை தியேட்டர்லதான் போய் பார்க்கணும்.
இந்தக் 'கனல்' படத்தை நான் பார்க்காமலே பேச முடியும். இயக்குநரிடம் கனலா அனலா என்ன? என்றுதான் கேட்டேன். படத்தோட ஹீரோயின் காவ்யாவும் நல்லா நடிச்சிருக்கு. நல்லாவும் தமிழ் பேசினாங்க. புரொடக்ஷன்ல இருந்தேன்னு சொன்னது ரொம்ப ஆச்சர்யமா இருந்தது" என்று கூறி அனைவரையும் பாராட்டி வாழ்த்தினார்.