நடிகர் கமல்ஹாசனின் நிறைவேறாத ஆசை..!
Actor Kamal Haasan - பொன்னியின் செல்வன் படமாக்கப்பட்டால், வந்தியத்தேவனாக நடிக்க ஆசைப்பட்டாராம் நடிகர் கமல்ஹாசன்.;
Actor Kamal Haasan -எம்ஜிஆர், கமல்ஹாசன் ஆகியோர் முயற்சித்தும் திரைப்படமாக்க முடியாமல் போன லட்சியக் கனவுப் படமான 'பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினம் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. லண்டன் வாழ் யாழ்ப்பாணத் தமிழரான சுபாஷ்கரன் அல்லி ராஜாவின் லைகா நிறுவனத்தின் முதலீட்டில் இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் 'பொன்னியின் செல்வன்' படத்தைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' படமாக்கப்பட்டால் அதில் வந்தியத்தேவனாக நடிக்க ஆசைப்பட்டாராம் நடிகர் கமல்ஹாசன். 33 வருடங்களுக்கு முன்பு அதற்கான முயற்சியை முன்னெடுத்த கமல்ஹாசனுக்கு இறுதியில் அம்முயற்சி வெற்றியடையாமல் போனது.
கமல்ஹாசனின் நிறைவேறாத அந்தக் கனவு, தற்போது 'பொன்னியின் செல்வன்' திரைப்பட ட்ரெயிலர் மூலம் 'பொன்னியின் செல்வன்' கற்பனைப் புதினத்துக்குள் தனது கரகரத்த கம்பீரக் குரல் வழியே பார்வையாளனை அழைத்துச் சென்றிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2