நடிகர் தனுஷூடன் ஜோடி சேர்ந்த மனைவி ஐஸ்வர்யா - வைரலாகும் புகைப்படம்

மூத்தமகனின் பள்ளி விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யா, கணவர் தனுஷூடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம், வைரலாகி வருகிறது.

Update: 2022-08-24 02:38 GMT

தனுஷ் - ஐஸ்வர்யா மற்றும் மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்திய அளவில் நடிகராக வலம் வருகிறார், ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான இவர், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை, கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு, யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இருவரும், கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர்.

இதுகுறித்து தனுஷ் தனது ட்விட்டர் பதிவில், கடந்த 18 ஆண்டுகள் தம்பதியாகவும், பெற்றோராகவும் ஒன்றாகப் பயணித்ததாகவும், தற்போது தானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். தங்களது தனிப்பட்ட சுதந்திரத்திதற்கு மதிப்பளிக்கும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும், இந்த மணமுறிவை ஐஸ்வர்யாவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தினார். இவர்களின் பிரிவு குறித்து, இன்றளவும் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

இந்நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து, குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி, வைராலாகி வருகிறது.

தனது மூத்தமகனின் பள்ளி விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இருவரும் தங்களது மகன்களுடன் இணைந்து, குடும்பமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது சமூக வலைத் தளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தில் பிரபல பாடகர் விஜய் ஏசுதாஸ் மற்றும் அவர் மனைவியும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News