‘‘இது ஜெயிலர் வாரம்’’ நடிகர் தனுஷ் போட்ட ட்வீட் வைரல்
Ajith Kumar Open Talk Superstar Rajini ‘‘இது ஜெயிலர் வாரம்’’ நடிகர் தனுஷ் போட்ட ட்வீட் மற்றும் அஜித்தின் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த பேச்சும் வைரலாகி வருகிறது.;
Ajith Kumar Open Talk Superstar Rajini - நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மற்றும் சிவராஜ்குமார் வில்லனாகவும் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது.
superstar rajinikanth jailer latest news
ஜெயிலர் படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்ப்பார்பை இது பூர்த்தி செய்யும். மேலும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துரையைச் சேர்ந்த பிரபலங்களும் ஜெயலிலர் படம் குறித்து அவ்வப்போது பேசி வருகின்றனர். இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை திரையுலக பிரபலங்கள் பார்க்க வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்ட ட்விட்டர் பதிவு வைரலாகி வருகின்றது.
superstar rajinikanth jailer latest update
நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பதிவில், ’இது ’ஜெயிலர்’ வாரம்’ என்று குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் மகளை திருமண பந்தம் முறிந்தபோதும், அவர் ரஜினிக்கு இன்னும் ரசிகராக உள்ளார் என்பது இதன் மூலம் தெரிகிறது என சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, ஏற்கெனவே நடிகர் அஜித் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன், நடிகர் அஜித் ஒரு மேடையில் தான் சூப்பர் ஸ்டாராக ஆக வேண்டும் என கூறியிருந்தார். இதனையடுத்து அஜித் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அவரும் சூப்பர் ஸ்டாரை பற்றி பேசியதால்தான் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானேன் என்று கூறியுள்ளார்.
jailer latest update, jailer update sun pictures
தற்போது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், அஜித்தின் இந்த பேச்சு தொடர்ந்து வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.