சென்னையில் நடிகர் தனுஷுன் 'கேப்டன் மில்லர்' பூஜையுடன் துவக்கம்

captain miller movie dhanush -சென்னையில் நடிகர் தனுஷுன் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-23 06:29 GMT

captain miller movie dhanush - நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் மிக நீண்ட கால பேச்சுவார்த்தைக்குப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படம், பிரமாண்ட வசூலைக் குவித்த கேஜிஎப் படம் போன்று எடுக்க உள்ளதாக சமீபத்தில் இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார்.

captain miller movie pooja

இந்த படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ளார் தனுஷ். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்தப்படம் 1930-கள் மற்றும் 40-களில் மெட்ராஸ் பிரசிடென்சியை மையமாக வைத்து பீரியட் படமாக எடுக்கப்பட உள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், மூர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்தப் படத்திற்கான பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பலரும் கலந்துகொண்டனர். அந்த புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Tags:    

Similar News