தனுஷ் - சாரா…நண்பர்களா… காதலர்களா..?
பாலிவுட் படஉலகின் முன்னணி நடிகையான சாரா அலிகானும் தனுஷும் நெருக்கமாக விருந்தொன்றில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலானது.;
நடிகர் தனுஷ் தமிழைத் தொடர்ந்து பிறமொழிப் படங்களில் அண்மைக்காலமாக அதிகம் கவனம் செலுத்தி வருகின்றார். தனது குடும்ப வாழ்வில் இவரது மனைவி ஐஸ்வர்யாவுக்கும் இவருக்கும் ஏற்பட்ட மனமுரண் காரணமாக மணமுறிவு அறிவிப்பை இருவரும் கடந்த ஜனவரியில் அறிவித்துவிட்டு, பிரிந்து வாழ்கின்றனர்.
அன்றோடு ஐஸ்வர்யா தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தாக மாறிவிட்டார். ஆனால், வருகிற நவம்பரில் இவர்களது திருமண நாளில் இருவரும் மீண்டும் ஒன்று சேரப்போவதாக தகவல் கசிகிறது. எனவே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் ஐஸ்வர்யா தனுஷாக மாறலாம் என்பதுதான் கோலிவுட் பட்சி சொல்லும் பரபரப்பு ஆரூடம்.
ஆனால், இந்திப் படங்களில் கவனம் செலுத்திவரும் தனுஷ், அங்கே சாரா அலிகான் மீதும் கவனம் செலுத்துகிறாரோ என்கிற உஷ்ணச் செய்தி விர்ரென்று பரவி வருகிறது. இந்தியில் 'அட்ராங்கி ரே' படத்தில் தனுஷும் சாராவும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அண்மையில், மும்பையில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் இந்திப் படவுலகின் முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், இந்தி நடிகர் சயீப் அலிகான் மகளும் முன்னணி நடிகையுமான சாரா அலிகான் மற்றவர்களைவிட தனுஷுடன் அதிகம் நெருக்கம்காட்டி காண்போர் வியக்கும் வண்ணம் தனுஷின் கையை தன் கையால் வளைத்து மிக சகஜமாக வளைய் வந்ததுதான் இப்போது பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.
சமூக வலைத்தளமெங்கும் இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்தநிலையில், தனுஷும் சாராவும் நண்பர்களா… காதலர்களா… என்கிற கேள்வி றெக்கைகட்டிப் பறக்கிறது.