எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து கூறிய நடிகர் அஜித்

அதிமுக பொதுச்செயலாராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து கூறினார்.;

Update: 2023-03-30 12:00 GMT

நடிகர் அஜித் குமார்.

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடலநலக்குறைவால் கடந்த 24ம் தேதி காலமானர். அஜித் தந்தையின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் விஜய், விக்ரம், சிம்பு, சூர்யா, கார்த்தி உள்ளிட்ட திரைபிரபலங்களும் ஆறுதல் கூறினர்.

இந்த நிலையில், தந்தை மறைவுக்கு நடிகர் அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி நேற்று ஆறுதல் கூறினார். அப்போது அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் தொலைபேசி வாயிலாக வாழ்த்து கூறினார்.

நேற்றைய தினம் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News