ஒருபக்கம் திருமணம் - மறுபக்கம் பிரசவம்: நிக்கி கல்ராணி வீட்டில் ஷாக்!

நடிகை நிக்கி கல்ராணிக்கு திருமணம் நடந்த அதே நாளில், அவரது சகோதரி சஞ்சனாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது, அவரது குடும்பத்தினரை குதூகலப்படுத்தி இருக்கிறது.

Update: 2022-05-22 06:30 GMT

திருமணத்தின் போது ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி. 

'மிருகம்', 'ஈரம்', 'அரவான்', 'யாகாவாராயினும் நாகாக்க', 'மரகத நாணயம்' உட்பட பல படங்களில் நடித்தவர் ஆதி. இதேபோல், 'டார்லிங்', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்', 'கோ-2','கலகலப்பு-2' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் நிக்கி கல்ராணி.

கடந்த சில ஆண்டுகளாகவே, இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் 'பச்சைக்கொடி' காட்டினர். தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்தது.

இதை தொடர்ந்து, கடந்த 18ம் திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருவரின் திருமணம் நடந்தது. இதில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவி பிரசாத், நடிகர்கள் விஜயகுமார், ஜீவா, அருண் விஜய், ஆர்யா, பாக்யராஜ், பூர்ணிமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, நிக்கி கல்ராணியின் குடும்பத்தில், அதே நாளன்று இன்னொரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. நிக்கி கல்ராணியின் சகோதரி, சஞ்சனா கல்ராணிக்கு, அன்றைய தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஒரே நாளில் இரட்டிப்பு சந்தோஷச் செய்தி என்பதால், குடும்பத்தினர் குதூகலத்தில் உள்ளனர். 

Tags:    

Similar News