இருபதாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகும் 'ஆளவந்தான்'..!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'ஆளவந்தான்' படம் மறுவெளியீடாக வெளிவரவிருக்கிறது.

Update: 2022-09-02 11:54 GMT

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் கமல்ஹாசன் நாயகனாக நடித்த, 'ஆளவந்தான்' படம் 2001-ம் ஆண்டு வெளியானது. பிரமாண்டத் தயாரிப்பு பெருவெற்றி பெரும் என்று எதிர்பார்த்த எதிர்பார்ப்பு அத்தனையும் தலைக்குப்புறக் கவிழ்ந்து படம் படுதோல்வியைத் தழுவியது.

படம் அடைந்த தோல்வியால், தயாரிப்பாளர் தாணுவுக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் ஒருவர்க்கொருவர் மீது அன்று ஏற்பட்ட மனத்தாங்கல் இன்றுவரை விட்டு விலகவில்லை.

அண்மையில் கமலின் 'விக்ரம்-2' அடைந்த வெற்றியின் சூட்டோடு, கலைப்புலி தாணு, 'ஆளவந்தான்' படத்தை மீண்டும் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார். 21 ஆண்டுகளுக்கு முன்பு மூன்று மணி நேரம் ஓடக்கூடிய படமாக இருந்த படத்தின் நீளத்தில் ஒரு மணி நேரத்தைக் குறைத்து, இரண்டு மணிநேரப் படமாக எடிட் செய்து 3டி தொழில் நுட்பத்துடன் படம் வெளிவரவிருக்கிறதாம்.

அன்று தோல்வியைக் கொடுத்த 'ஆளவந்தான்' இன்று வெளியாகி வெற்றியை அள்ளிக்கொடுப்பான் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 'ஆளவந்தான்' மறு வெளியீடு குறித்து எந்தத் தகவலும் கமல்ஹாசனுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News