விக்ரம் திரைக்கதையில் விஜய்யின் லியோ படம் பற்றிய குறிப்பு

leo movie update today, Leo Connection in Vikram Screenplay Bookவிக்ரம் திரைக்கதையில் விஜய்யின் லியோ படம் பற்றிய குறிப்பு இடம் பெற்று உள்ளது.;

Update: 2023-02-07 10:07 GMT

விக்ரம் படத்தின் திரைக்கதையில் நடிகர் விஜய்யின் லியோ படம் பற்றிய குறிப்பு இடம் பெற்று இருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

leo movie update today, Leo Connection in Vikram Screenplay Bookதமிழ் திரை உலகில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தனது அபிமான நட்சத்திரம் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி ரிலீஸ் செய்தார். அந்த படம் சக்கை போடு போட்டது. இதன் காரணமாக அவர் பிரபல இயக்குனரானார்.

leo movie update today, Leo Connection in Vikram Screenplay Bookலோகேஷ் கனகராஜ் ஏற்கனவே நடிகர் இளைய தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை வெளியிட்டு இருந்தார் அந்த படமும் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தளபதி 67 என்கிற படம் வெளிவர இருக்கிறது. இதற்கான பூஜை கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடந்து வருகிறது.


leo movie update today, Leo Connection in Vikram Screenplay Bookஇதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது என நீங்கள் கேட்கலாம். தளபதி 67 படத்திற்கு லியோ என பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த லியோ படம் பற்றிய குறிப்பு ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்திலேயே இருக்கிறது என கூறுகிறார்கள் திரை உலகத்தினர் அது எப்படி என்பதை இனி பார்ப்போம்.

leo movie update today, Leo Connection in Vikram Screenplay Bookலோகேஷ் கனகராஜ் இதுவரை இயக்கிய படங்களான மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்பட எல்லா படங்களின் ஸ்கிரீன் ப்ளே புத்தகங்களையும் சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த ஸ்கிரீன் பிளே புத்தகத்தில் அதுவும் விக்ரம் படத்தின் ஸ்கிரீன் பிளே புத்தகத்தில் ஒரு இடத்தில் செம்போன் வினோத் போஸ் அதாவது போலீஸ் அதிகாரியாக வருகிறவர் ஒரு சீனில் சொல்வார். அமர் பற்றி எனக்கு எப்படி தெரியும் என்றால் காஷ்மீருக்கு நான் ஒரு கேஸ் விஷயமாக வந்து போனபோது தெரிய வந்திருக்கும் என  கூறுவார்.


leo movie update today, Leo Connection in Vikram Screenplay Bookஇங்கே தான் அந்த லியோ படத்தோட கணக்கும் இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதை நிரூபிப்பது போல இப்போது லியோ படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க காஷ்மீரில் தான் நடக்கிறது. அது மட்டுமல்ல அதிகப்படியான போதைப்பொருட்கள் நடமாடும் இடமும் காஷ்மீர் தான். கடந்த ஆண்டு மட்டும் 1500 சதவீதம் போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது என்ற தகவல் வந்துள்ளது. மேலும் கோக்கோ சீட் எனப்படும் சாக்லேட் போதை பொருள் மூலமும் போதைப்பொருள் கடத்துகிறார்கள். இப்படித்தான் தளபதி 67 லியோ படத்துடன் கனெக்ட் ஆகிறது என்கிறார்கள்.

Tags:    

Similar News