இந்திய- ஆங்கில திரைப்படமாக உருவாகி இருக்குது 'A Beautiful Breakup'

இளையராஜா இசையமைச்சிருக்கும் இப்படத்தை. இங்கிலாந்தைச் சேர்ந்த 5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிச்சிருக்குது;

Update: 2022-04-02 08:00 GMT

இந்திய- ஆங்கில திரைப்படமாக உருவாகி இருக்குது 'A Beautiful Breakup'.

இளையராஜா இசையமைச்சிருக்கும் இப்படத்தை. இங்கிலாந்தைச் சேர்ந்த 5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிச்சிருக்குது. இப்படத்தில் அறிமுக நடிகர்களான க்ரிஷ் மற்றும் மட்டில்டா இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிச்சிருக்காய்ங்க. அஜித்வாசன் உக்கினா டைரக்ட் பண்ணி இருக்கும் இப்படத்தில். கே.குணசேகரன் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் செஞ்சிருக்காய்ங்க.

இந்நிலையில் ஆம்ஸ்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் (AIFF) சிறந்த ஒரிஜினல் இசை பிரிவில் இந்தப் படம் விருது வென்றுள்ளது. இளையராஜா இந்தப் படத்திற்காக 30 ஒரிஜினல் ஒலிப்பதிவுகளை அமைச்சிருக்கா தெரியுமா?. அதற்கு ஆம்ஸ்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.



 


Similar News