சினிமா சொந்தங்களை காக்க உங்களால் முடிந்தளவு உதவி - இயக்குநர் மோகன்.G வேண்டுகோள்

ருத்ரதாண்டவம் படக்குழு சார்பில்;

Update: 2021-05-13 14:58 GMT

 சினிமா சொந்தங்களை காக்க உங்களால் முடிந்தளவு உதவி - இயக்குநர் மோகன்.G வேண்டுகோள் விடுத்துளள்ளார்

கொரோனா இரண்டாம் அலையில் தமிழகம் முழுவதும் ஸ்தம்பித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

அதில் தமிழ் சினிமாவும் அடங்கியுள்ளது .படப்பிடிப்புகள் முடங்கி போனதால் சினிமாவை நம்பியுள்ள பல ஆயிரம் தொழிலாளர்கள் பல்வேறு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று ருத்ரதாண்டவம் படக்குழு சார்பில் இயக்குநர் மோகன் தலைமையில் தென்னிந்திய திரைப்பட ஸ்டண்ட் யூனியனுக்கு 25 கிலோ எடையுள்ள 25 அரசி மூட்டைகள் வழங்கப்பட்டது.

இதேபோல் நம் சினிமா சொந்தங்களை காக்க உங்களால் முடிந்தளவு இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் திரையுலகினருக்கு இயக்குநர் மோகன்.G வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News