நடிகர் மோகன்லால் - 61வது பிறந்தநாள்.

மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளவர் நடிகர் மோகன்லால்.;

Update: 2021-05-21 12:23 GMT

நடிகர் மோகன்லால்.

நடிகர் மோகன்லால் விஸ்வநாதன் நாயர் @ மோகன்லால் 61வது பிறந்தநாள்

மலையாள சூப்பர் ஸ்டார் மற்றும் நடிப்பு நாயகன் மோகன்லால் இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ஒட்டு மொத்த இந்திய திரையுலகினர் பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் #இன்ஸ்டாநியூஸ் வாசகர்களாகிய நீங்களும் நாமும் நம்முடைய மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்

பிறந்தநாள் வாழ்த்துகள்.

மோகன்லால் விஸ்வநாதன் நாயர் @ மோகன்லால் 1960 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதி கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூர் என்ற இடத்தில், வழக்கறிஞரும் அரசு ஊழியருமான விஸ்வநாதன் நாயர் - சாந்தகுமாரி தம்பதியர்க்கு மகனாக பிறந்தார்.

இவர்களுடைய குடும்பம் திருவனந்தபுரத்திலுள்ள முடவன்முகள் என்ற இடத்தில் அமைந்திருக்கும் அவருடைய தாயாரின் வீட்டிற்கு இடம் பெயர்ந்தது. முடவன்முகளில் 'LP' பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார், அதற்குப்பின் திருவனந்தபுரத்தில் உள்ள மாடல் ஸ்கூலில், தனது படிப்பைத் தொடர்ந்தார்.

பள்ளிக்கூட படிப்பில் சராசரி மாணவனாகத்தான் திகழ்ந்தார், அதே சமயம் கலை உலகம் அவர் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது; பள்ளிக்கூட நாடகங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றார். பொதுவாக பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களே சிறந்த நடிகனாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் ஆறாவது வகுப்பு மாணவரான மோகன்லால் பள்ளிக்கூடத்தில் சிறந்த நடிகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், .

பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, இவர் திருவனந்தபுரத்தில் உள்ள மகாத்மா காந்தி கல்லூரியில் தமது பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இவர் நடிப்புடன் கொண்டிருந்த இணைப்பை தொடர்ந்துவந்தார் மேலும் சிறந்த நடிப்பிற்கான பல விருதுகளை இவர் வென்றார். இங்குதான் இவர் நாடகத்தின் மீதும் திரைப்படங்களின் மீதும் பற்றுகொண்ட சக மாணவநண்பர்களுடன் நட்பு ஏற்பட்டது.அவர்களில் சிலர் இவருடைய முதல் சாதனைக்கு வித்திட்டனர், அவர்களில் ப்ரியதர்ஷன் ,M.G.ஸ்ரீகுமார் மற்றும் மணியன்பிள்ளராஜு போன்றவர்கள் மிகவும் பிரபலமான இயக்குனர்களாகவும், நடிகர்களாகவும் உருவெடுத்தார்கள்.

மோகன்லால் முதன் முதலில் "திறநோட்டம்" (1978) என்ற படத்தில் நடித்தார். தணிக்கைக் குழுவினருடன் (சென்சார் போர்டு ) ஏற்பட்ட தகராறுகள் காரணமாக இப்படம் ஓரிடத்தில் மட்டும் வெளியானது

அதனைத் தொடர்ந்து மோகன்லால் கடந்த 1980 ஆம் ஆண்டு பாசில் இயக்கிய 'மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் அறிமுகமாகி பல வெற்றி படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வந்தார் என்பதும் கடந்த 1996 ஆம் ஆண்டு 'பரதம்' என்ற திரைப்படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறையாக 'வனப்பிரஸ்தம்' என்ற திரைப்படத்திற்கும் அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

அந்த காலக் கட்டத்தில் பிரபலமான எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள் எழுதி ஐ.வி சசி இயக்கிய படமான உயரங்களில் என்ற படத்தில் நடித்தார், அதன் கதை ஏமாற்றுவது மற்றும் துரோகம் இழைத்தலை கருத்தாகக் கொண்டது, இது அவருடைய சிறப்பை உயர்த்திக்காட்டியது. அதற்குப்பிறகு அவரது நண்பனும் கல்லூரியில் சக மாணவருமான இயக்குநர் ப்ரியதர்ஷனின் அறிமுகத் திரைப்படமான பூச்சைக்கு ஒரு மூக்குத்தி என்ற படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார்.

1986 ஆம் ஆண்டு அவருக்கு மிகவும் சிறந்த ஆண்டாக விளங்கியது. சத்யன் அந்திக்காடு அவர்களின் டி.பி. பாலகோபாலன் எம்.ஏ. என்ற திரைப்படம் அவருக்கு கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை முதன்முறையாக பெற்றுத்தந்தது.

தமிழ் ரசிகர்களுக்கும் மோகன்லால் பரிச்சயமானவர் என்பது தெரிந்ததே. மணிரத்தினம் இயக்கிய 'இருவர்' கமல்ஹாசன் நடித்த 'உன்னைப் போல் ஒருவன்' விஜய் நடித்த 'ஜில்லா' உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் மோகன்லால் நடித்த 'த்ரிஷ்யம்' திரைப்படம் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று என்பதும் இந்த படம் தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

லாலேட்டன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மலையாள நடிகர் மோகன்லால் தனது 61வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளவர் நடிகர் மோகன்லால். லாலேட்டன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இதுவரை 164 படங்களில் நடித்துள்ளவர். லூசிபர் உள்ளிட்ட முக்கியமான படங்களில் நடித்ததன்மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டவர்.

சிறந்த நடிகரும் நல்ல நண்பருமான மோகன்லாலிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது நீடித்த மகிழ்ச்சிக்கும் பாதுகாப்பான வாழ்க்கைக்கும் தான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.



 



Tags:    

Similar News