இப்படித்தான் நாயகர்கள் இருக்காய்ங்க...

கல்லாப் பெட்டி ஆக்டர் தெரியுமோ?

Update: 2021-05-16 10:37 GMT

இப்படித்தான் நாயகர்கள் இருக்காய்ங்க கல்லாப் பெட்டி ஆக்டர் தெரியுமோ?

கோலிவுட்டின் இன்னிக்கு தேதில கல்லாப் பெட்டி ஆக்டர் என்று பெயரெடுத்தவர் ஜி வி பிரகாஷ் ( இது இவர் படிச்சு வாங்கின பட்டம் இல்லீங்கோ .. தன்னை தேடி வருவோரிடம் கொடுக்கும் அட்வான்ஸை வாங்கிக் கொள்வதால் அவருக்கு கிடைச்ச பட்டப் பெயராம்) இவரிடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கும் ஒரு டைரக்டர் அவஸ்தை தான் நான் சொல்லபோற சங்கதி.

மணிவண்ணனிடன் அமைதிப்படை பார்ட் 2   ல அசிஸ்டெண்டாக இருந்தவர் - நேம் சண்முகம் முத்துசாமிங்கோ.. ('க/பெ.ரணசிங்கம் பட வசனகர்த்தா).. தொடக்கத்தில் கொரியர் பாயாக வேலை பார்த்துக் கொண்டே தன் சினிமா பசிக்கு தீனி தேடி வந்தாராம்..அப்போ நகுல்கன் பொன்னுசாமி, தங்கர்பச்சானிடம் எடுபிடியாக ஓடியவருக்கு மணிவண்ணந்தான் அசிஸ்டெண்ட் வாய்ப்பு வழங்கினாராம்.

அதுவே இவருக்கு பலவீனமாகி போச்சாம்.. அதாவது என்னான்னா இவர் யாரிடமாவது கதை சொல்ல போனாலே  'மணிவண்ணன் அசிஸ்டண்டா இருந்தவராம்- அப்படீன்னு யாராவது சொன்னதைக் கேட்டு ஓஹோ வெரி ஓல்ட் மேன் போல என்று கண்டு கொள்ளாமல் போய் விட்டார்களாம்.

ஆனாலும், அடங்காதே என்ற ஆஜானுபாகுவான நாயகனுக்கான ஒரு கதைய ரெடி செய்து சரத், விஷால் மற்றும் ஆர்யா-கிட்டயெல்லாம் சொல்லி சோர்ந்து போனவரை ஜி வி பிரகாஷ் அழைச்சுண்டு போய் கதையை கேட்டாராம்..அம்புட்டும் கேட்டுப்புட்டு அதே கதையில் நானே நடிக்கிறேன்னு சொல்லி பெரிய டப்பு அட்வான்ஸ் எல்லாம்  கொடுத்து ஷூட்டிங்குக்கும் ஏற்பாடு செஞ்சுட்டாராம்.

இதை எதிர்பார்க்காத நம்மாளு சம்முகம் நாயகன்கிட்டே கெஸ்ட் ரோலுக்கு சரத்-கிட்டே பேசி  அனுமதி வாங்கி படமெல்லாம் எடுத்துப்புட்டாராம். அதுக்கான டப்பிங்கும் பின்னணி இசைக்கும்  படத்தைப் பார்த்த மிஸ்டர் கல்லாபெட்டியார் ஆடிப் போயிட்டாராம். ஏன்னா ஒட்டு மொத்த கதையும் சரத்தைச் சுற்றி போகுதாம். கல்லாபெட்டியார் ரோல் சும்மா டம்மியா தெரிஞ்சதில் அப்செட் ஆகி படத்தையே முடக்கி வச்சிருக்காராம்.

ஹூம்ம் இப்படியும் ..ஸாரி.. இப்படித்தான் நாயகர்கள் இருக்காய்ங்க.நமக்கு எதுக்கு ஊர் வம்பு.

Tags:    

Similar News