சர்வதேச திரைப்பட விழாவில் கர்ணன், கட்டில் படங்களுக்கு விருது

பெங்களூருவில் நடைபெற்ற இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் தனுஷின் கர்ணன், கட்டில் ஆகிய படங்கள் விருதை வென்றன.;

Update: 2021-10-19 01:00 GMT

கர்ணன் திரைப்படம்

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியிடப்பட்டன. இதில் விருதுக்காக தமிழ் மொழி படங்களும் கலந்து கொண்டன.

விழாவின் நிறைவில், 2 தமிழ் திரைப்படங்கள் விருதுக்கு தேர்வாகின. அதன்படி, . சிறந்த இந்திய திரைப்படம் என்ற பிரிவில், நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் தேர்வானது. அதேபோல், சிறந்த தென்னிந்திய திரைப்படம் என்ற பிரிவில், விரைவில் வெளியாக இருக்கும் கட்டில் என்ற திரைப்படம் விருது பெற்றது.

இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள கட்டில் திரைப்படத்தில், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கிறார். நடிகர் தனுஷ் நடித்த கர்ணன், ஏற்கனவே வசூலையும், விருதுகளையும் அள்ளிக் குவித்துள்ளது.

Tags:    

Similar News