மகன் செய்த விபரீதச்செயல் - பிரபல நடிகருக்கு ஏற்பட்ட சறுக்கல்
போதைப்பொருள் வழக்கில் மகன் கைதானதால், பாலிவுட் நடிகர் ஷாரூக் கானுக்கு சறுக்கலை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்; இவர், அண்மையில் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில், போதை பார்ட்டியில் கலந்து கொண்டதாக கைது செய்யப்பட்டார். ஆர்யன் கானுடன் மேலும் பலரை போதைப்பொருள் தடுப்பு போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில், ஆர்யன் கான் உள்ளிட்ட அனைவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போதை வழக்கில், ஷாரூக்கானுக்கு பெரும் தலைகுனிவையும், தலைவலியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஷாருக்கானின் சினிமா வாய்ப்புகள், விளம்பர வாய்ப்புகளையும் மகனின் கைது விவகாரம் பாதித்துள்ளது. ஆன்லைன் கற்றல் நிறுவனமான பைஜூஸ் நிறுவன விளம்பரங்களில் ஷாரூக்கானை நடித்து வந்தார். தற்போது அவருடைய மகன் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளதால், தங்களுடைய விளம்பரப் படங்களில் இருந்து ஷாரூக் கானை, பைஜூஸ் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.
இதேபோல், ஹூண்டாய், ஜியோ, ஐசிஐசிஐ வங்கி வேறுபல விளம்பரங்களிலும் ஷாருக்கான் நடித்து வந்தார். அந்த நிறுவனங்களும், விளம்பரங்களை வெளியிட தயங்குவதாக, தகவல்கள் கசிந்துள்ளன.