பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வெற்றி

Update: 2021-05-02 14:00 GMT

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வெற்றி பெற்றது.பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக பிரபாகரன் போட்டியிட்டார். அதிமுக வேட்பாளராக தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார். திமுக வேட்பாளராக போட்டியிட்ட பிரபாகரன் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 882 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் 90 ஆயிரத்து 115 வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஸ்வரி 18331 வாக்குகளையும், தேமுதிக வேட்பாளர் ராஜேந்திரன் 2915 வாக்குகளையும், இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சசிகலா 1069 வாக்குகளையும் பெற்றனர். நோட்டாவுக்கு 1763 வாக்குகள் பதிவானது

Similar News