எப்போது பட்டாசு வெடிக்க வேண்டும்: அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தீபாவாளி நாளில் எப்போது பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற விவரத்தை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.;

Update: 2021-11-01 13:00 GMT

கோப்பு படம்

இது தொடர்பாக, தமிழக சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வரும் தீபாவளியன்று, நவம்பர் 4ம் தேதி, காலை 6:00 மணி முதல், காலை 7:00 மணி வரையும், அதேபோல் மாலையில், 7:00 மணி முதல், இரவு 8:00 மணிவரை பசுமை பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது.

தீபாவளியின் போது, ஒலி மாசை ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிப்பதை, பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அதேபோல், மருத்துவமனை, பள்ளிகள், வழிபாட்டுத்தலம் அமைந்துள்ள பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News