அல்ட்ரா வயலட் F77 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்

அல்ட்ரா வயலட் நிறுவனம் இந்தியாவில் அதிவேக இ-பைக் F77ஐ அறிமுகம் செய்துள்ளது;

Update: 2022-02-25 05:17 GMT

அல்ட்ராவயலெட் எஃப்77 

இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான தேவையும், விற்பனையும் கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

இதனாலேயே பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதியதாக சந்தையில் களமிறங்கியுள்ளன. அதேநேரம் நம் நாட்டில் அதி செயல்திறன்மிக்க சில எலக்ட்ரிக் பைக்குகளும் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன.

தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் உதவியுடன் செயல்படும் இவி ஸ்டார்ட்அப் நிறுவனம் அல்ட்ராவயலெட் ஆகும். இந்த பிராண்டில் இருந்து அல்ட்ராவயலெட் எஃப்77 என்கிற பெயரில் அதி-செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் வடிவமைக்கப்பட்டு வருகிறது..

25kW BLDC மின் மோட்டார் இருப்பதால் அதிக வேகம் உள்ளது. 90Nm வரையிலான டார்க்குடன், அல்ட்ராவயலெட் F77 இ-பைக் சந்தையில் உள்ள பல பிக்குகளுக்கு நல்ல போட்டியாளராக உள்ளது. கியர்பாக்ஸ் இல்லாததால், பைக்கில் கிளட்ச் லீவர்களோ கியர்களோ இல்லை. வழக்கமான பைக்கை போலவே, வலது காலை வைக்கும் இடத்தில் பின்புற பிரேக் லீவரும் பொருத்தப்பட்டுள்ளது.

7.03 வினாடிகளில் 100kmph வேகத்தை இந்த எஃப்77 பைக் எட்டும். டாப் ஸ்பீடு ௧௪௦கிம்ப். அல்ட்ராவயலெட் எஃப்77 எலக்ட்ரிக் பைக்கிற்கான இயக்க ஆற்றலை வழங்க 3 மாடுலர் லித்தியம்-அயன் பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட உள்ளது.

வீடுகளில் கிடைக்கும் சாதாரண த்ரீ-பின் பவர் சாக்கெட் உதவியுடன் எளிதாக சார்ஜ் செய்ய முடியும். பேட்டரிகள் வெறும் மூன்று மணி நேரத்தில் 80% சார்ஜ் பெற முடியும் மற்றும் 5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.


எஃப்77 லைட்னிங், எஃப்77 லேசர் மற்றும் எஃப்77 ஷேடோ ஆகிய மூன்று மாடல்களில் கிடைக்கும்

ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 150கிமீ தொலைவிற்கு செல்லலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கில் எல்இடி விளக்கு தொகுப்பு, டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை, பல்வேறு ரைடிங் மோட்கள், ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங், பைக்கில் ஏற்பட்டுள்ள பழுதை கண்டறியும் வசதி உள்ளிட்டவை தொழிற்நுட்ப அம்சங்கள் உள்ளன.

ஆன்ரோடு ரூ.3 லட்சம் முதல் ரூ.3.25 லட்சம்

Tags:    

Similar News