செகந்திரா பாத்- ராமேஸ்வரம் இடையே திருச்சி வழியாக வாராந்திர சிறப்பு ரயில்

செகந்திரா பாத் -ராமேஸ்ரம் இடையே திருச்சி வழியாக வாராந்திர சிறப்பு ரயில் வருகிற 19-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.;

Update: 2021-10-15 08:31 GMT

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் - ராமேஸ்வரம் இடையே வருகிற பத்தொன்பதாம் தேதி முதல்  வாராந்திர சிறப்பு ரயில் மெயின் லைன் வழியாக இயக்கப்பட இருக்கிறது.

குண்டூர், கூடுர், திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக இயக்கப்படும்.

செகந்திராபாத்தில் செவ்வாய்க் கிழமைகளில் இரவு 9.25 இக்கு புறப்பட்டு வியாழன் அதிகாலை 3.10 இக்கு ராமேஸ்வரம் சென்று அடையும். மறு முனையில்  வியாழன் இரவு 11.55 இக்கு ராமேஸ்வரத்தில் புறப்பட்டு சனிக்கிழமை காலை 7.10 க்கு செகந்திராபாத் சென்றடையும்.

திருச்சி மற்றும் டெல்டா மாவட்ட மக்களுக்கு திருப்பதி செல்ல இன்னொரு நேரடி ரயில் கிடைத்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.

Tags:    

Similar News