மின்சார வாகன காந்தங்கள் மலிவு விலையில் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்

மின்சார வாகனங்களுக்கு அதிகம் தேவைப்படும் நியோடைமியம் அயர்ன் போரான் (Nd-Fe-B) காந்தங்கள் மலிவான விலையில் கிடைக்கும் வகையில் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

Update: 2022-12-21 16:41 GMT

மின்சார வாகனங்களுக்கு அதிகம் தேவைப்படும் நியோடைமியம் அயர்ன் போரான் (Nd-Fe-B) காந்தங்கள் மலிவான விலையில் கிடைக்கும் வகையில் இந்திய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

மின்சார வாகனங்கள் 90%க்கும் அதிகமான இந்த வகை காந்தங்களால் உருவாக்கப்பட்ட மோட்டார்களால் இயங்குகின்றன. இதன் காந்தத் தன்மையின் சிறப்பான செயல்பாட்டால் 1984ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது முதல், பல்வேறு சாதனங்களுக்கு இந்த காந்தம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.


இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் பவுடர் மெட்டலார்ஜி மற்றும் மெட்டீரியல்ஸ்-க்கான சர்வதேச மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் (ஏ.ஆர்.சி.ஐ) உள்ள வாகன எரிசக்தி உற்பத்தி பொருட்களுக்கான மையத்தின் விஞ்ஞானிகள் இந்த வகை காந்தங்களை உருவாக்கும் புதிய உத்தியை அண்மையில் கண்டறிந்துள்ளனர். இந்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு இணங்க அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் நிதி உதவியோடு புதிய உத்தியைப் பயன்படுத்தி காந்தங்களை உருவாக்கும் ஆலையை அமைக்கும் பணியில் ஏ.ஆர்.சி.ஐ மையம் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் வணிக ரீதியாக நியோடைமியம் அயர்ன் போரான் காந்தங்களை உற்பத்தி செய்யவும் இந்த உத்தி உதவிகரமாக இருக்கும். இதனால் வாகன உற்பத்தி துறையின் முக்கிய தேவைகள் உள்நாட்டிலேயே பூர்த்தி செய்யப்பட்டு, வெளிநாடுகள் மீதான சார்பு வெகுவாகக் குறையும்.

Tags:    

Similar News