மீண்டும் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் இதுதான்
சென்னையில் இன்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 101.01 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ல எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிக்கின்றன. கொரோனா ஊரடங்கு காலமான மார்ச் முதல், மே மாதம் வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.
அதன் பின்னர், பெட்ரோல், டீசல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தத் தொடங்கின. பின்னர், சில நாட்கள் விலையில் மாற்றம் இல்லாத போக்கும் இருந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. சென்னை நகரில், நேற்று பெட்ரோல் லிட்டர் 100.75 ரூபாய், டீசல் லிட்டர் 96.26 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 101.01 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து 96.60 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இந்த விலை மாற்றம், தமிழகத்தின் பிற நகரங்களில் சிறிது மாறுபடலாம்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு வாகன ஓட்டிகள், சரக்கு வாகனம் இயங்குவோரை கவலையடையச் செய்துள்ளது.