வறுமையில் வாடும் சுற்றுலா டிராவல்ஸ் ஓட்டுனர்கள்

வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் சுற்றுலா டிராவல்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள்! நிவாரண உதவி செய்ய அரசுக்கு கோரிக்கை.

Update: 2021-04-29 11:45 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பஸ் நிறுத்த பகுதியில் சுற்றுலா டிராவல்ஸ் சங்கம் செயல்பட்டு வருகிறது இந்த சங்கத்தில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் உள்ளன.

இந்நிலையில் கொரோனா தொற்று கட்டுபாடு காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களான கொல்லிமலை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ள சூழலில், சுற்றுலா பேருந்துகள் எதுவும் முழுமையாக இயக்கப் படவில்லை.

இந்த தொழில் சார்ந்த உள்ள சுற்றுலா டிராவல்ஸ் உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து நம்மிடம் பேசிய சுற்றுலா டிராவல்ஸ் உரிமையாளர் கடந்த ஆண்டு இதே போல கொரானா தொற்றினால் சுற்றுலாத்துறை தொழில் மிகுந்த நசிவடைந்த அடைந்த நிலையில் மீண்டும் அதே போல் ஒரு நிலை உருவாகி உள்ளதால், இந்த தொழிலை நம்பியுள்ள ஏராளமான குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருவதாகவும், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு அதிக அளவில் ஆட்கள் கூடுவதை தடைசெய்ததாலும் இந்த டிராவல்ஸ் தொழிலை நம்பியுள்ள ஓட்டுனர்களும் பாதிப்படைந்துள்ளனர் எனவே அரசு நிவாரண உதவித் தொகை வழங்கி இந்தத் தொழிலை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News