யமஹா பைக்குகளில் ப்ளூடூத் வசதி
ஆர்15 மற்றும் எம்டி15 பைக்குகளில் ப்ளூடூத் வசதியை கொண்டுவரும் யமஹா;
இளைஞர்களின் ஃபேவரட் பைக்குகளாக விளங்கும் ஆர்15 மற்றும் எம்15 மோட்டார் சைக்கிள்களில் விரைவில் ப்ளூடூத் இணைப்பு வசதி கொண்டுவரப்பட உள்ளது
புதிய எஃப்.இசட்-எக்ஸ் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து யமஹா நிறுவனம் அதன் அனைத்து இந்திய மாடல்களிலும் ப்ளூடூத் இணைப்பை கூடுதல் தேர்வாக கொண்டுவர திட்டமிட்டுள்ளது
யமஹாவின் எஃப்.இசட் மோட்டார் சைக்கிள்களில் ஏற்கனவே ப்ளூடூத் வசதி வழங்கப்பட்டதை அடுத்து, சமீபத்தில் ஃபேஸினோ 125 மற்றும் ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்கள் ப்ளூடூத் செயல்பாட்டுடன் அப்டேட் செய்யப்பட்டன.
இந்த நிலையில் பிரபலமான ஆர்15 மற்றும் எம்டி15 பைக்குகளிலும் ப்ளூடூத் வசதியை கொண்டுவர யமஹா திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.
ப்ளூடூத் இணைப்பு வசதி வந்துவிட்டால், யமஹா ஆர்15 மற்றும் எம்டி15 பைக்குகளை யமஹா மோட்டார்சைக்கிள் அப்ளிகேஷன் மூலம் ஓட்டுனரின் ஸ்மார்ட்போன் உடன் இணைத்து கொள்ள முடியும். இவ்வாறான செயல்பாட்டிற்கு இந்தியாவில் கனெக்ட் எக்ஸ் மற்றும் ஒய்-கனெக்ட் என இரு அப்ளிகேஷன்கள் உள்ளன
யமஹா எம்டி-15 மோட்டார்சைக்கிளின் இந்திய எக்ஸ்ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1,41,640 ஆகவும், ஆர்15 பைக்கின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.52,866 ஆக உள்ளன.