AI திறன் வளர்க்கும் இந்திய அரசு..! AI -க்கு தனி இலவச கோர்ஸ் அறிமுகம்..!
AI தொழில்நுட்பங்கள் குறித்து தனி கோர்ஸ் வந்தாச்சு. அதுவும் இலவச கோர்ஸ். வாங்க..இளைஞர்களே..மாணவர்களே..! கத்துக்கங்க..!
ai technology free course
உலகம் முழுவதும் இன்றைய அதிகபட்ச பேச்சு AI தொழில்நுட்பம் பற்றியதுதான். AI பயன்பாடு, AI-ன் எதிர்காலம், AI பற்றி நிபுணர்களின் கருத்து என உலகம் முழுவதும் இதைப்பற்றிய விவாதங்கள் நடந்து வருகின்றன.
நேர் மற்றும் எதிர்மறையான கருத்துக்கள் நிலவினாலும் கூட சில கட்டுரைகளுக்கு தேவையான அடிப்படை விஷயங்களை தொகுத்து தருகிறது என்பதில் சற்று ஆறுதலான விஷயம்.
இன்றைய இளைஞர்கள் AI குறித்து கற்றுக்கொள்ள எந்த அளவுக்கு ஆர்வமாக உள்ளனர் என்பதை நாமே இன்னும் சிறிது நாட்களிலோ அல்லது ஓரிரு மாதங்களிலோ தெரிந்து கொள்ளலாம்.
இளைஞர்களே..! மாணவர்களே..1 நீங்கள் AI குறித்து கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறீர்களா? எனில் உங்களுக்கு நமது இந்திய அரசு இலவசமாக கற்றுக்கொடுக்கத் தயாராக உள்ளது. கட்டணமில்லா பயிற்சி என்பது கூடுதல் கவனம் பெறுகிறது. ஆமாம், நமது மத்திய அரசு இளைஞர்களுக்காக புதிய இலவச AI தொழில்நுட்ப கோர்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியா 2.0 திட்டம்
இந்தியா 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு இலவச செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளது. இந்த வகுப்புகள் அனைத்தும் முற்றிலும் AI தொழில்நுட்ப அடிப்படையிலானதாகும்.
இந்த AI தொழில்நுட்ப கோர்ஸ்- ஐ GUVI என்ற நிறுவனத்துடன் இந்திய அரசு இணைந்து உருவாக்கியுள்ளது. NCVET மற்றும் ஐஐடி மெட்ராஸ் போன்ற உயர் நிறுவனங்களால் இந்த கோர்ஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆர்வம் ஒன்றே தகுதி
இந்த கோர்ஸில் AI தொழில்நுட்பத்தின் அடிப்படை, அதன் பயன்பாடுகள் மற்றும் AI நெறிமுறைகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடத்திட்டத்தில் சேர்ந்து படிப்பதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை.
AI படிப்பதற்கு கோடிங் தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தப் பாடத்திட்டத்தில் சேர எதையும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமே கிடையாது. இங்கு ஆர்வம் மட்டுமே முக்கிய அளவுகோல்.
வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்களுக்கு விருப்பம் இருந்தால் AI பாடத்திட்டத்தில் சேர்ந்து படிக்கலாம். AI தொழில்நுட்பம் குறித்து தெளிவாக கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்காகவே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் பல மொழிகளிலும் கிடைக்கிறது என்பது கூடுதல் வசதி.
அது என்ன GUVI ?
ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஏஎம் அகமதாபாத் ஆகியவற்றால் நிறுவப்பட்டதுதான் GUVI என்ற Ed-Tech நிறுவனம். இது இந்தியாவின் பல்வேறு பிராந்திய மொழிகளில் தொழில்நுட்பம் சார்ந்த திறன்களைக் கற்பிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கும் நிறுவனமாகும். இவர்கள் ஏற்கனவே அதிக அளவில் ஆன்லைன் கோர்ஸ்களையும், வேலை வாய்ப்புகளையும் வழங்கி வருகின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தின் நோக்கமே, இந்தியாவில் எல்லாவிதமான கல்வியையும் எல்லோருக்கும் கிடைக்கச் செய்யும் வகையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதாகும். ஒருவர் எப்படிப்பட்ட பின்னணியிலிருந்து வருகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், கல்வி அனைவருக்குமே சமமானது, அதைக் கற்றுக்கொள்ள அனைவருக்கும் உரிமை உள்ளது என்பதை இந்நிறுவனம் நம்புகிறது. மாணவர்களின் கனவுகளை நிறைவேற்று வதற்கும் அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்குவதற்கும் இந்நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது இவர்கள் வெளியிட்டுள்ள இலவச AI கோர்ஸை, GUVI-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே பதிவு செய்து, பாடத்திட்டங்களை நீங்கள் உடனடியாகத் துவங்கலாம். இது முற்றிலும் இலவசம் என்பதால் இளைஞர்கள், மாணவர்கள் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்கிக்கொள்ள உடனே ரெடி ஆகுங்க. எதிர்கால AI ஒருவேளை உங்களையும் வழிநடத்தலாம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆர்வம் உள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பை 'க்ளிக்' செய்து பதிவு செய்யுங்கள்.