ஆவியூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

காரியாப்பட்டி அருகே, ஆவியூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

Update: 2022-03-07 00:30 GMT

ஆவியூரில் , கிராமப் பெண்களுக்கு வேளாண் மாணவிகள் செயல் விளக்கம் செய்து காட்டினர். 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டம் ஆவியூர் கிராமத்தில், மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் கிராமப்புற பங்கேற்பு மதிப்பீட்டு வரைபடம் வரைந்து, ஊரின் வளங்களை மக்களுக்கு விளக்கினர். ஆவியூர் கிராம மக்கள்,  தமது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய மேற்கொள்ளும் இயக்கங்களையும் அதற்கான போக்குவரத்து முறைகளையும் உணர்த்தும் வகையில், இயக்க வரைபடம் வரைந்து விளக்கப்பட்டது.

அத்துடன், ஆவியூர் கிராமத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை சுட்டிக்காட்டும் வகையில் காலக்கோடு, பருவந்தோறும் விளைவிக்கப்படும் பயிர்களின் சாகுபடி பற்றிய தொகுப்பாக, பருவகால நாட்காட்டி ஆகியவற்றை கோலப்பொடி கொண்டு வரைந்து காட்டி விளக்கினர். மேலும், விளக்கப்படம் கொண்டும் தங்கள் கருத்துகளை விளக்கினர். இதை, இளங்களை வேளாண்மை இறுதியாண்டு மாணவிகள் எஸ்.வாசந்தி, ப.சிவஷாலினி, செ.சௌந்தர்யா, என்.ஸ்ரியா, பா.சுகிபிரபா ஆகியோர் வரைந்தனர்.

Tags:    

Similar News