ITC நிறுவனம் சார்பில் 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள் : மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைப்பு

ITC நிறுவனம் சார்பில் 50  ஆக்சிஜன்  செறிவூட்டிகள் : மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைப்பு
X

 ITC நிறுவனம் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்  சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங்க்பேடி இடம்  வழங்கப்பட்டது.

ITC நிறுவனம் சார்பில் 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாநகராட்சி ஆணையரிடம் ஐ டி சி நிர்வாகம் சார்பில் வழங்கபட்டது.

சென்னை: ITC நிறுவனம் சார்பில் 50 ஆக்சிஜன் செரிவூட்டிகள் கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங்க்பேடி அவர்களிடம் வழங்கப்பட்டது.

சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ITC நிறுவனம் சார்பில் அதன் பிரதிநிதிகள் 50 எண்ணிக்கையிலான ஆக்சிஜன் செறிவூட்டிகளை முதன்மை செயலர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங்க்பேடி மற்றும் வணிக வரித்துறை முதன்மைச் செயலாளர் எம்.ஏ சித்திக் ஆகியோரிடம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், மத்திய வட்டார இணை ஆணையாளர் பி.என்.ஶ்ரீதர், துணை ஆணையாளர்கள் மேகநாதரெட்டி, ஆழ்பி ஜான் வர்கீஸ், விஷுமகாஜன் மற்றும் வட்டார துணை ஆணையாளர்கள் பி.ஆகாஷ், ராஜ கோபால சுங்கரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!