பாரீசில் நடைபெறும் விவாடெக் நிகழ்ச்சியில் இன்று மாலை பிரதமர் மோடி உரை

பாரீசில் நடைபெறும் விவாடெக் நிகழ்ச்சியில் இன்று மாலை பிரதமர் மோடி உரை
X

இந்திய பிரதமர் மோடி 

பாரீசில் நடைபெற உள்ள விவாடெக் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று உரையாற்ற உள்ளார்.

பாரீசில் நடைபெறவுள்ள விவாடெக்கின் 5-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்ற உள்ளார். இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள இந்த நிகழ்வில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளார்.

விவாடெக் என்பது 2016-ஆம் ஆண்டு முதல் புதிய தொழில் தொழில்நுட்பங்களில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு அமைப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் பாரீசில் நடைபெறும் இந்த டிஜிட்டல் நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து பல தொழில் வல்லுநர்கள் கலந்து கொள்வார்கள்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சே மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான டிம் குக், பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுகர்பெர்க், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அதிபர் பிராட் ஸ்மித் போன்ற பெரு நிறுவனங்களின் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!