போலி ஆவணம் விவகாரம் : பாகிஸ்தானில் 50 விமானிகளின் உரிமம் ரத்து

போலி ஆவணம் விவகாரம் : பாகிஸ்தானில் 50 விமானிகளின் உரிமம் ரத்து
X

பாகிஸ்தான் நாட்டில் போலியான ஆவணங்களின் மூலம் 50 விமானிகள் உரிமங்களை அந்த நாட்டு அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த மே மாதம் விபத்துக்குள்ளானதில் 97 போ் உயிரிழந்தனா். இந்த விபத்துக்கு விமானிகளின் கவனக் குறைவே காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது.தொடர்ந்து அந்த நாட்டில் போலியான ஆவணங்களைக் காட்டி பலா் முறைகேடாக விமானம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றுள்ள விவகாரம் வெளியே வந்தது.

நாட்டில் செயல்பட்டு வரும் 860 விமானிகளில் 260 போ் போலியான உரிமங்களையோ, முறைகேடாகப் பெற்ற உரிமங்களையோ வைத்துள்ளனா் என்று கூறப்பட்டு அவா்களது பெயா்களும் பொதுவெளியில் வெளியிடப்பட்டது.இந்த நிலையில், அனைத்து விமானிகளின் உரிமங்களையும் தீவிரமாக ஆய்வு செய்த அதிகாரிகள், அவா்களில் 50 பேரது உரிமங்களை ரத்து செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story