சீனா கழுதைக்கறி இறக்குமதி செய்வது ஏன் தெரியுமா..?
கழுதை -கோப்பு படம்
ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள எல்லைகள் பிற நாட்டுனான உறவுக்கு சவாலான நிலையாக இருப்பதால் பல மூல வளங்கள் மற்றும் பொருட்களின் உலகளாவிய விநியோகம் ஒரு சில நாடுகளால் மட்டுமே ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.
அதனால் இன்றைய உலகில் நாடுகளுக்கு இடையேயான நீண்டகால மூலோபாய கூட்டாண்மைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய உறவுகள் வளங்களைக் கட்டுப்பாடு இல்லாமல் ஏற்றுமதி செய்வதற்கும் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவுவதற்கும் அதன் மூலமாக உலக அரங்கில் நாடுகளுக்கு இடையே செல்வாக்கு பெறவும் இது வழிவகுக்கிறது.
இந்தச் சூழலில்தான் சீனாவுக்கு ஆண்டுதோறும் 200,000 கழுதை இறைச்சி மற்றும் கவிதை இறைச்சி சார்ந்த உப பொருட்களையும் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை பாகிஸ்தான் பெற்றது. இந்த ஒப்பந்தம் ஏற்கவனவே இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகளை வலுப்படுத்தும்விதமான ஒரு புதிய ஒப்பந்தமாகப் பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானின் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைச்சக அதிகாரி டாக்டர் இக்ராம், 'இன்டிபென்டன்ட் உருது'க்கு அளித்த பேட்டியின் போது இந்த புதிய ஒப்பந்தம் குறித்து உறுதிப்படுத்தினார். இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆண்டுதோறும் 216,000 கழுதை தோல்கள் மற்றும் இறைச்சியை வழங்க பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது.
எவ்வாறாயினும், கராச்சி துறைமுகத்திற்கு அருகில் இறைச்சிக் கூடங்களை நிறுவுவதற்கும் பாகிஸ்தான் ஒப்பந்தப்படி முன்மொழிந்துள்ளதால் சீனா ஒப்பந்தத்தை மேலும் விரிவுபடுத்த முயன்று வருகிறது.
ஏற்றுமதியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, குவாதரில் புதிய இறைச்சிக் கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சமீபத்திய ஆய்வுகளின்படி, பாகிஸ்தானில் தற்போது 5.2 மில்லியன் கழுதைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது உலகின் மூன்றாவது பெரிய எண்ணிக்கையாகும். 2022 ஆம் ஆண்டு முதல் நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார அமைதியின்மைக்கு ஆதரவு அளிக்கும் வகையில், இந்த கழுதை வர்த்தகத்தில் இருந்து பாகிஸ்தான் மில்லியன் கணக்கில் வருமானம் ஈட்டமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா, எஜியாவோ போன்ற பாரம்பரிய மருந்துகள் உற்பத்தி செய்வதற்கு கழுதைத் தோல்கள் அதிக அளவில் தேவைப்படுவதால் தனது நட்பு நாடான பாகிஸ்தானுக்கு சீனா வழங்கியுள்ளது. இதன்மூலமாக பார்மபரிய மருந்து தயாரிப்புத்துறை மற்றும் கால்நடைத் துறை, இரண்டுமே பொருளாதார ரீதியில் பயனடைகின்றன.
சீனா ஏன் கழுதை தோல் மற்றும் கழுதை இறைச்சியை இறக்குமதி செய்கிறது?
கழுதையின் தோலில் உள்ள ஜெலட்டின் மூலம் தயாரிக்கப்படும் பாரம்பரிய மருத்துவமான எஜியாவோவின் தேவையை பூர்த்தி செய்வதற்காக சீனா முதன்மையாக பாகிஸ்தானில் இருந்து கழுதைகளை இறக்குமதி செய்கிறது.
எஜியாவோ, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல், சருமத்தை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு முக்கிய மருந்தாகும். இது ஆரோக்ய நலன்களுக்காக சீன பாரம்பரிய மருத்துவத்தில் மிகவும் மதிப்புமிக்க பொருளாகும். சீனாவில் கழுதைகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கின்றன. ஆனால் அதன் தேவையோ அதிகம். மேலும் கழுதைகளுக்கு நிலையான இனப்பெருக்க நடைமுறைகள் சீனாவில் இல்லாததாலும் அதன் தேவையை சமன்செய்ய பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சூப்பர் டேஸ்டில் கழுதை இறைச்சி உணவு
மருத்துவ தேவைக்காக மட்டும் அல்லாமல் கழுதை இறைச்சி சீனாவின் ஹெபே மாகாணத்தில் ஒரு பிரபலமான சுவை உணவாக தயாரிக்கப்படுகிறது. கழுதை இறைச்சி பர்கர்கள், சீன மொழியில் 'lǘròu huǒshāo', ஒரு பிரபலமான தெரு உணவு ஆகும். மேலும் Baoding மற்றும் Hejian நகரங்களிலும் கழுதை இறைச்சியில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு தனி வரவேற்பு உள்ளதாம்.
கழுதை பிரியாணி, கழுதை வறுவல், கழுதை சில்லி, கழுதை மெகா குழம்பு..என இப்படி ஏதாவது செய்வார்களோ..?
இப்படி பல தேவைகளுக்கு கழுதை தேவைப்படுவதால் பற்றாக்குறையை சமாளிக்க, சீனா வெளிநாடுகளிடம் இருந்து பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உலகில் கழுதைகள் அதிகம் உள்ள நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும். கூடவே சீனாவின் முக்கிய கூட்டாளி பாக்கிஸ்தான். அப்புறம் என்ன சும்மா விடுமா..? அதனால் பில்லியன் கணக்கில் வணிக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு கணிசமான அளவு கடனுதவி அளித்து அதன் நெருக்கடியை சமாளிக்க சீனா ‘உதவி’ செய்து வருகிறது. 2022 இன் தரவுகளின்படி, பாகிஸ்தானில் $26.6 பில்லியன் (€24.6 பில்லியன்) மதிப்புள்ள சீனக் கடன் உள்ளது. இது உலகின் மற்ற எந்த நாட்டையும் விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu