கொரோனா வேகமெடுப்பதால் ஜப்பான் பிரதமர் இந்திய வருகை ரத்து

கொரோனா வேகமெடுப்பதால்   ஜப்பான் பிரதமர் இந்திய வருகை ரத்து
X

ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகாவின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனால், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.இதே போலவே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனு அடுத்த வாரம், இந்தியா வர திட்டமிட்டிருந்தார். அதனால், அவரது வருகையும் கொரோனா தொற்று பரவலால் பயணம் ரத்து செய்யப்பட்டது.

ஏற்கனவே கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தின சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து இருந்தார். அந்த காலகட்டத்தில் இங்கிலாந்தில் வீரியமிக்க கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்தது. ஆகவே, அவர் இந்திய பயணத்தை ரத்து செய்தார்.

பிரதமர் மோடி, மே, 8ல் போர்ச்சுகல் நாட்டில் மே 8ம் தேதி நடக்க இருந்த இந்திய - ஐரோப்பிய கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்தார். ஆனால், கொரோனா தொற்று அதிகமாகி வருவதன் காரணமாக போர்ச்சுகல் பயணத்தை மோடி ரத்து செய்துவிட்டார். அந்த வரிசையில் தற்போது ஜப்பான் பிரதமர் வருகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!