அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் மீண்டும் லஞ்ச  ஒழிப்புத்துறையினர் சோதனை
X
முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு, 6 மாவட்டங்கள் உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் இன்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.அதை யொட்டி கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீடுகளில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டுள்ளனர். கோவையில் உள்ள அவரது வீடுகளிலும் அவரது உதவியாளர் சந்தோஷின் வீட்டிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. வேலுமணி உள்ளியிட்ட 41 இடங்களில் சோதனை நடக்கிறது. சேலத்தில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. கோவை உடன்பட 6 மாவட்டங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அவரது பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 3928% சொத்து சேர்த்துள்ளதாக அதாவது ரூ. 53.28 கோடி சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த சோதனையின் போது அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனால் இந்த சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மைல்கல் பகுதியில் உள்ள வேலுமணியின் வீடு உட்பட கோவையில் 41 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. வேலுமணியின் சகோதரர் அன்பரசன் வீடு கடைகளிலும், சென்னையில் 8 இடங்களிலும்,சேலத்தில் 4,இடங்களிலும் திருப்பத்தூர், நாமக்கல்,கிருஷ்ணகிரி மற்றும் கேரளாவில் தலா ஒரு இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. முன்னாள் அமைச்சரிடம் அவரது வீட்டில் வைத்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. 6மாவட்டங்கள் உட்பட 58இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

அவரிடம் நேரடியாக நடத்தப்படும் விசாரணையில் வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடப்பதாக தெரிய வந்துள்ளது.சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து, பிரிட்டன் போன்ற நாடுகளில் சொத்துக்கள் வாங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிகிறது.

Tags

Next Story