சமூக சேவையாற்றும் இளைஞர்களுக்கு விருது-விண்ணப்பங்கள் வரவேற்பு

முதல்வர் மாநில இளைஞர் விருது
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தகுதியான ஆண் மற்றும் பெண்கள், முதல்வர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்குமாறு கலெக்டர் உமா அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தன்னார்வ தொண்டுப்பணிகளில் ஈடுபடும் இளைஞர்களின் சேவையை அங்கீகரிக்கும் நோக்கில், இந்த விருது ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகின்றது.
இந்த விருதுக்கான வயது வரம்பு 15 முதல் 35 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்களுக்கு விருது வழங்கப்படும். இதில், ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் அடங்கும். 2025ம் ஆண்டுக்கான விருது, வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரால் வழங்கப்படும்.
விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள், 2024 ஏப்ரல் 1ஆம் தேதியில் குறைந்தபட்சம் 15 வயது நிரம்பியவராகவும், மார்ச் 31ஆம் தேதிக்கு முன் 35 வயதுக்குள் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. மேலும், அவர்கள் செய்த தொண்டு செயற்பாடுகள் தெளிவாகக் காணக்கூடியதும், அளவிடக்கூடியதும் இருக்க வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் [www.sdat.tn.gov.in](http://www.sdat.tn.gov.in) மூலமாக மே 3ஆம் தேதி மாலை 4:00 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu