சார்ஜ் போடும்போது தீப்பிடித்த பேட்டரி வண்டி – வெப்படையில் பரபரப்பு

சார்ஜ் போடும்போது தீப்பிடித்த பேட்டரி வண்டி – வெப்படையில் பரபரப்பு
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை அடுத்த ஆனங்கூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர், கடந்த 2021ஆம் ஆண்டு பேட்டரி இயங்கும் இருசக்கர வாகனத்தை வாங்கி பயன்படுத்தி வந்தார். ஆனால், அவர் வாங்கிய வாகனத்தின் டீலர் கடை திருச்செங்கோட்டில் இருந்தபோதும், அது சில மாதங்களில் மூடப்பட்டுவிட்டது. இதனால் வாகனத்தில் ஏற்படும் எந்தவொரு பழுதிற்கும் செந்தில் நாமக்கல் சென்று சர்வீஸ் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்தச் சூழலில், நேற்று முன்தினம் இரவு, அவரது பேட்டரி வாகனத்தை வீடில் சார்ஜ் செய்யும் போது திடீரென பேட்டரி வெடித்துள்ளது. வெடித்ததுடன், இருசக்கர வாகனமெல்லாம் தீப்பற்றி சில நிமிடங்களில் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. சம்பவம் நடந்த வேளையில் வீட்டு வாசலில் இருந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என கூறப்படுகிறது.
இந்த திடீர் சம்பவம் வெப்படை மற்றும் அதன் சுற்றுப்புற மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பேட்டரி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து பலரும் கேள்விகள் எழுப்பியுள்ளனர். சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu