திருச்செங்கோடு கைலாசநாதர் கோவில் சுவர் இடியும் அபாயம் – அதிகாரிகள் நேரடி ஆய்வு

திருச்செங்கோடு கைலாசநாதர் கோவில் சுவர் இடியும் அபாயம் – அதிகாரிகள் நேரடி ஆய்வு
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்களில் ஒன்றான கைலாசநாதர் கோவிலின் மேற்கு பகுதி சுற்றுச்சுவர் தற்போது இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. மேலும், கோவிலின் வடக்கு பகுதியும் அதேபோல இடியும் நிலையைக் கொண்டுள்ளது. இந்த நிலையை தொடர்ந்து, திருத்தொண்டர் படை இயக்குனர் ராதாகிருஷ்ணன், தாசில்தார் கிருஷ்ணவேணி உள்ளிட்ட வருவாய் துறையினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், திருத்தொண்டர் படை அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ள ராதாகிருஷ்ணன், “2015 ஆம் ஆண்டில், இந்த கோவிலின் சூழ்நிலை குறித்த ஆலோசனை மற்றும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. அப்போது, வருவாய்த்துறையினர், நில அளவை துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் கோவிலின் சுற்றுச்சுவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தனர். ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, மேற்கு சுவர் மேலும் மோசமான நிலையில் இடிந்து விழும் சூழ்நிலை உருவாகியுள்ளது,” எனக் கூறினார்.
பழமையை பேசும் இக்கோவிலின் பாதுகாப்புக்காக உடனடி நடவடிக்கை அவசியம் எனக் கோவில் பார்வையாளர்கள் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu