முட்டை விலை மீண்டும் உயர்வு

முட்டை விலை மீண்டும் உயர்வு
X
நாமக்கலில் முட்டையின் கொள்முதல் விலை 530 காசில் இருந்து ஐந்து காசு உயர்த்தி 535 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது

முட்டை விலை மீண்டும் உயர்வு

நாமக்கல்: முட்டை உற்பத்தியின் மையமாக விளங்கும் நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், நாட்டின் முட்டை உற்பத்தி மற்றும் சந்தை நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விரிவாக ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு, முட்டையின் கொள்முதல் விலை 530 காசில் இருந்து ஐந்து காசு உயர்த்தி 535 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த விலை உயர்வு, நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பண்ணையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளிலும் முட்டை விலை வேறுபாடு காணப்படுகின்றது:

சென்னை – 580,

மும்பை – 560,

மைசூரு – 570,

பெங்களூரு – 555,

கோல்கட்டா – 535,

டெல்லி – 480,

பர்வாலா – 455,

ஐதராபாத் மற்றும் விஜயவாடா – 500 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story