நாமக்கலில் 3,991 கல்லூரி சேர்க்கை இடங்கள் – குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி!

நாமக்கலில் 3,991 கல்லூரி சேர்க்கை இடங்கள் – குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி!
X
நாமக்கல் மாவட்டத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மாணவர்கள் மே 27ஆம் தேதி வரை இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்

நாமக்கலில் 3,991 கல்லூரி சேர்க்கை இடங்கள் – குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 கல்வியாண்டிற்கான பி.ஏ., பி.எஸ்சி., பி.காம். உள்ளிட்ட இளநிலை முதலாம் ஆண்டு பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் நடைபெற்று வருகிறது. மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாணவர்கள் மே 27ஆம் தேதி வரை இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் மொத்தமாக 3,991 இடங்கள் கிடைக்கின்றன. இதில், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் 1,115 இடங்கள், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 1,074 இடங்கள், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் 1,072 இடங்கள், குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் 470 இடங்கள் மற்றும் சேந்தமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் 260 இடங்கள் என உள்ளன.

தாமாக இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்காக, அனைத்து அரசு கல்லூரிகளிலும் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மாணவர்கள் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ரூ.48 கட்டணமாகவும், ரூ.2 பதிவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும். ஆனால், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல், விரைவில் விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags

Next Story