விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு – நாமக்கலில் PM கிசான் முகாம்

விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு – நாமக்கலில் PM கிசான் முகாம்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டாரத்தில், விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டத்தின் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. வேளாண் உதவி இயக்குநர்கள் மோகன் மற்றும் ஹேமலதா இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த திட்டத்தின் கீழ் 20வது தவணையாக ரூ.2,000 பெறுவதற்காக விவசாயிகள் தகுதியுடன் தங்களின் விவரங்களை சரி செய்து பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு முகாம்கள், மே 31 ஆம் தேதி வரை, நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் நடைபெறும். இத்திட்டத்தில் பயனடைய, நில உடமை பதிவேற்றம், e-KYC உள்ளிட்ட விவரங்களை சரியாகப் பதிவுசெய்திருத்தல் அவசியமாகும்.
வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள், தங்களது வங்கிகளையோ அல்லது அஞ்சல் அலுவலகங்களையோ அணுகி, புதிய வங்கி கணக்கைத் திறந்து இணைக்கலாம்.
மேலும், பயனாளி இறந்திருந்தால், அவரது ஆதார் எண் மற்றும் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து நிதி வழங்குவதை நிறுத்த முடியும். இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள், தங்களது ஆதார் எண், நில விவரம், வங்கி கணக்கு விவரங்களை கொண்டு PM-KISAN இணையதளம் அல்லது பொது சேவை மையம் மூலம் பதிவு செய்து நிதியுதவியைப் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu