இன்று விண்ணப்பியுங்கள் – நாளை இலவச கணினி பயிற்சி தொடக்கம்

இன்று விண்ணப்பியுங்கள் – நாளை இலவச கணினி பயிற்சி தொடக்கம்
நாமக்கல்: இந்தியன் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RSETI) சார்பில், இணையதளம் மற்றும் கணக்குப்பதிவியல் தொடர்பான 30 நாட்கள் இலவச பயிற்சி முகாம் நாளை (மே 14) முதல் துவங்குகிறது. இப்பயிற்சி முகாம், ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் திறந்தவெளி வாய்ப்பாகும். கிராமப்புற இளைஞர்கள் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
பயிற்சியின் போது, காலை மற்றும் மாலை தேநீர், மதிய உணவு, பயிற்சி பொருட்கள், மற்றும் பயிற்சி முடிவில் அரசாங்க அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் ஆகியவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். மொத்தம் 35 பயிற்சியாளர்கள் மட்டுமே இந்த முகாமுக்கு தேர்வாக உள்ளனர். ஆகவே, ஆர்வமுள்ளவர்கள் விரைந்து நேரில் வந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தகவலுக்கு கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்:
96989 96424, 88259 08170, 84892 79126
இந்த பயிற்சி முகாம், நவீன தொழில்நுட்ப அறிவை பெற்றுத்தருவதோடு, வேலைவாய்ப்பிற்கான திறனையும் வளர்க்கும் சிறந்த வாய்ப்பாக அமைகிறது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu